சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் முதன்மைக் கோயிலில் ரூ. 1,14,54,854 ரொக்கம், 1 கிலோ 631 கிராம் தங்கம், 2 கிலோ 074 கிராம் வெள்ளி வந்துள்ளது.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி. எஸ். பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் முன்னிலையில் இந்த எண்ணும் பணி நடைபெற்றது. உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 6,02,502, உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் ரூ. 16,252, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 5,166 காணிக்கையாக வந்துள்ளது.
மண்னை
க.மாரிமுத்து.