மதுரை மீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மழலையர் களுக்கான பட்டமளிப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக பட்டிமன்ற நடுவர், அறிஞர் பத்மஸ்ரீ. சாலமன் பாப்பையா கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் களிடம் கலந்துரை யாடினார். மேலும் மங்கையர்கரசி கல்வி குழுமத்தின் செயலாளர் அசோக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளித்தாளாளர் ஜோதி செந்தில்வேல் முருகன், தங்கமாலதி முன்னிலை வகித்தார். பள்ளி இயக்குநர் ரமா பிரதீபா , பிரினீட்டா கல்யாணி ஆகியோர் சிறப்பு ஆலோசனை மற்றும் வரவேற்புரை யாற்றினர். பள்ளி முதல்வர் விமலா நன்றி கூறினார். அனைத்து ஆசிரியர்கள், மாணவ மாணவியர், அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு செய்திருந்தனர்.