தைப்பூசத்தை முன்னிட்டு குண்டடத்தில் பக்தி கோலாகலம்.
தைப்பூச திருநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் காரையூர் கிராமம் எல்லாக்கட்டு பகுதியைச் சேர்ந்த தோழன் கலைக்குவினர் குழுவினர் பழனி நோக்கி நடைபாதையாக ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட இந்த பாதயாத்திரை, முழு பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
பயணத்தின் போது குண்டடம் பகுதியில் மத்தளம் முழங்க காவடியாட்டம் ஆடி பக்தர்கள் இறைநாம முழக்கங்கள் எழுப்பினர். காவடி ஆட்டத்துடன் இணைந்த பக்திப் பாடல்கள் அப்பகுதியை ஆன்மிக மணத்தில் நிறைத்தன.
பழனி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நோக்கி தொடர்ந்த இந்த பாதயாத்திரை, தைப்பூசத்தின் ஆன்மிக மரபையும் முருக பக்தியின் எழுச்சியையும் வெளிப்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.