கோவை காளப்பட்டி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், AI & கணினி பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் டிப்ளமோ பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் கல்வி பயிலும் போது முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகின்றது..
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது..
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில், சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி டீன் ரம்யா மற்றும் முதல்வர் கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்தனர்…
இந்த முகாமி்ல், கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களான சுகுணா பம்ப்ஸ் அண்ட் மோட்டார்ஸ், லஷ்மி மெஷின் வர்க்ஸ் (LMW),சி.ஆர்.ஐ.பம்ப்ஸ், பாரத் பென்ஸ், பிரிக்கால்,ரெனால்ட்,அசோக் லேலாண்ட்,வோல்க்ஸ் வேகன்,உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றன..
சுகுணா பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர் வேலை வாய்ப்பு முகாமில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் முகாமில் தேர்வு பெற்ற மாணவர்கள் வருடத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கு மேல் சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
வேலை வாய்ப்புகளை பெற்ற இளைஞர்களுக்கு சுகுணா கல்வி குழும நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்…