நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டுவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுத்தெரு நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியின் 24 வது ஆண்டுவிழா நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை தாங்க தாசிம்பீவி பெண்கள் கல்லூரியின் முதல்வர் Dr.சுமையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்..
ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை ஜாக்குலின் லதா யுகேஜி மாணவர்களுக்கு பட்டமளித்தார்.1 வது வார்டு உறுப்பினர் பாதுஷா துவக்க உரையாற்றினார். சதக் கல்லூரியின் பேரா.ஆசிஃப் பரிசுகள் வழங்கினார்.மைபா மூத்த உறுப்பினர்கள் ஹாரிஸ்,ஜாஹிர் ஹுசைன்,சாகிதீன், நிஜாமுதீன்,சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி மேலாளர் சுபைர் மற்றும் ஆசிரியைகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.