தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி 6 ஆவது வார்டு பொது மக்கள் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி செயல் அலுவலர் செ. முருகன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர் இதனை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் அவர்களிடம் பொது மக்களின் கோரிக்கை குறித்து கூறினார் இதனை உடனடியாக பரீசலீத்த எம் எல் ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில்
தாமரைக் குளம் பேரூராட்சி 6 ஆவது வார்டு பகுதியில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டது

புதியதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம் எல் ஏ கே.எஸ்.சரவணகுமார் குத்து விளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ச.பால்பாண்டி தாமரைகுளம் பேரூர் திமுக செயலாளர் கருத்தராசு தென்கரை பேரூராட்சி மன்ற தலைவர் வே. நாகராஜ் பேரூராட்சி செயல் அலுவலர்கள் தாமரைக்குளம் செ.முருகன் தென்கரை குணாளன் பெரியகுளம் நகர் திமுக செயலாளர் முகமது இலியாஸ் ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *