தஞ்சாவூர், பிப்- 3. தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவளகத்தில், தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன், முன்னாள் எஸ்.பி ஆசிஷ் ராவத் மீது ஊழல் புகார்.
தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவளகத்தில் அளித்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறேன். நான் தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன்.
கடந்த 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ்ராவத் பொறுப்பில் இருந்
தார். அவருக்கு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. குடியிருப்பு கட்டிடத்தை தவிர மற்ற பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல்வேறு விதமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதில் இந்திய வனச்சட்டத்தில் பாதுகாப்பு பட்டியலில் உள்ள தேக்கு மரங்களும் அடங்கும்.
தமிழக அரசுக்கு சொந்தமான சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் வளர்க்கப்பட்டிருந்த தேக்கு மரங்களை அரசிடமும், உரிய வனத்துறையிடமும் எவ்வித அனுமதியும் பெறாமல் வழிகாட்டுதலை பின்பற்றாமல்
தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல மரங்களை வெட்டியுள்ளார். வெட்டிய தேக்கு மரங்களின் மதிப்பு பல கோடிகள் இருக்கும்.
தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளராக பிரேம்குமார் பணிபுரிந்த போது காவலர்களின் நலனுக்காக "தீர்க்க சுமங்கலி திருமண மண்டபம்" கட்டப்பட்டது. அதன் நிர்வாகம் POLICE WELFARE SOCIETY வழியாக காவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு வாடகைக்கு விட்டு வசூல் செய்யப்படுகிறது. அப்படி வசூல் செய்யப்படுகின்ற பணம் சங்கத்திற்கு என்று தனி வங்கி கணக்கு துவங்கப்பட்டு அதில் சுமார் 25 ஆண்டுகள் சேமித்து வைக்கப்பட்ட பணத்தை அந்த சங்கத்தின் நோக்கத்திற்கு எதிராக ஆஷிஷ்ராவத் தனது அதிகாரத்
தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அரசால் வடிவமைத்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அருகில் கட்டிடத்துடன் இணைந்து ஒரு கூட்ட அரங்கத்தை தன்னிச்சையாக தன் விருப்பத்திற்கு கட்டியுள்ளார்.
அரசு கட்டிடம் கட்டுவதற்கு பின்பற்ற வேண்டிய டெண்டர் முறைகளை பின்பற்றாமலும், DTCP யில் முறையான அனுமதி பெறாமலும், தீயணைப்பு துறையில் உரிய மறுப்பில்லா சான்று பெறாமலும், அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கட்டிடத்தை நேரடி கண்காணிப்பில் கட்டியுள்ளார்.
மாவட்ட காவல் துறை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை அந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பயன்படுத்தாமல், அரசிடம் முன் அனுமதி பெறாமல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தி உள்ளார்
அரசு பணியில் இருந்த காவலர்களை கட்டுமான வேலைக்கு பயன்படுத்தியுள்ளார்.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிர்ப்புறம்
அரசு டெண்டர் விதிமுறைகளை பின்பற்றாமல் பூங்கா மற்றும் செயற்கை அலங்கார நீரூற்றுகளை அமைத்துள்ளார்.
அவர் செய்துள்ள இந்த சட்ட முரணான செயல்கள் குறித்து சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக இயக்குநர், சென்னை காவல்துறை இயக்குநர், தலைமைச்செயலகம் தமிழக உள்துறைச்செயலாளர், மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் ,காவல் துறை தலைவர் திருச்சிராப்பள்ளி.
காவல் துறை துணைத்தலைவர் (DIG) தஞ்சாவூர் ஆகியோருக்கு நகல் மனு அளித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.