திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டாச்சியர் அலுவலகம், தாராபுரம்.ஊர் பொதுமக்கள், மங்கலாம்பாளையம், காட்டம்மன் புதூர், ஆச்சியூர் புதூர், காட்டம்மன் நகர், ஆச்சியூர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆவின் பால் பண்ணை, ரேசன் கடை சேம்பர், நூல் மில், மாரியம்மன் கோவில், நெல் விதை உற்பத்தி மில் என மிக முக்கியமான பகுதியாகும் இப்பகுதி ஊர் பொதுமக்கள் தினமும் தாராபுரம் வந்து செல்ல மிக முக்கிய வழி தடம் அமைந்துள்ளது இதனால் பள்ளி குழந்தைகள், கூலி வேலைக்கு செல்லும் பொது மக்கள், பால் பண்ணைக்கு செல்லும் மக்கள், ரேஷன் கடைக்கு செல்ல பொது மக்கள் மற்றும் ஊனமுற்றவர்கள், முதியோர்கள் என தினதோரும், சாலை கடக்க வேண்டி உள்ளது. இங்கு அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் உடனடியாக தாராபுரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக அமைத்துத் தர வேண்டுமென தெரிவித்தனர்.