குறிஞ்சிப்பாடி வட்டம்
வடலூர் அருகே உள்ள வானதிராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன்,(35) கூலித்தொழிலாளி. அவரது மனைவி ராஜலட்சுமி,(30). இவர் நேற்று முன்தினம் தனது தாய் வள்ளி, (60), என்பவருடன் வடக்குத்து இந்தியன் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக ஸ்கூட்டரில் சென்றார்கள்.
நகைக்கான பணத்தை கட்டிய ராஜலட்சுமி தனது தாயாருடன் அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று தாயை விட்டுவிட்டு, நகையை வங்கியில் பெற மீண்டும் சென்றார். நகையை பெற்ற ராஜலட்சுமி தனது, ஸ்கூட்டர் வாகனத்தின் இருக்கையின் கீழ் பகுதியில் நகை பையை வைத்து விட்டு, தாயாரை அழைத்து கொண்டு வீடு செல்லும் வழியில் மளிகை கடை ஒன்றில் வாகனத்தை நிறுத்தினார். இருவரும் கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த, 4 சவரன் நெக்லஸ் மாயமானது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி இச்சம்பவம் குறித்து வடலூர் போலீசில் புகார் செய்தார்.
இச் சம்பவம் குறித்து வடலூர் போலிசார்
வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிய மர்ம நபர்கள் ராஜலட்சுமியை பின்
தொடர்ந்து நகையைபறித்து சென்றார்களா. என அந்த பகுதியில்உள்ள,கண்காணிப்பு கேமரா (சிசிடிவி ), பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்