திருமக்கோட்டை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-25 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் மற்றும் 10 ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரூ.15 ஆயிரமும் அதை தொடர்ந்து ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இவர்களைத் தவிர்த்து சிறப்பிடம் பெற்ற 24 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.24 ஆயிரமும், கல்வி ஊக்கத்தொகையை விசாலாட்சி அம்மாள் நினைவு அறக்கட்டளையின் நிறுவனரும் சிங்கப்பூர் தொழிலதிபர் பழனிச்சாமி வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 வது ஆண்டாக கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது திருமக்கோட்டை பகுதியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ 3. லட்சம் கல்வி ஊக்கத்தொகை தனது சொந்த பணத்தில் வழங்கி வரும் சிங்கப்பூர் தொழிலதிபர் பழனிச்சாமியை அப்பகுதி பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொழிலதிபர் பழனிசாமி பேசுகையில்… மாணவர்களாகிய நீங்கள் கஷ்டத்தை உணர்ந்து படித்தீர்கள் என்றால் இந்த உலகத்தை நீங்கள் தொடலாம். உங்களை கல்வியை மேம்படுத்துவதற்காக இந்த கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.