குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே கருங்குழி விசாலாட்சி சமேத கைலாசநாதர் கோவில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது.ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் பூர்வ ஜென்ம பாவம், வறுமை நீங்கி எல்லா வளமும் பெறலாம் என்பது ஜதீகம்.
அவ்வகையில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது. அந்த வகையில்,வடலூர் அருகே கருங்குழி விசாலாட்சி சமேத கைலாசநாதர் கோவில் அன்ன அபஷேகவழிபாடு நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்,