கிருஷ்ணகிரி
பாரத் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழக அளவில் இருந்து சுமார் 25 பள்ளிகள் பங்கு பெற்றது. இந்நிகழ்வில் தொடக்க நிகழ்ச்சியாக அதியமான் கல்வி நிறுவனத்தின் உடைய தாளாளர் சீனித் திருமால் ஐயா மற்றும் பாரத் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி உடைய தாளாளர் மணி அய்யா , இந் நிகழ்வின் பொறுப்பாளர் கராத்தே மாஸ்டர் மாரியப்பன் மற்றும் தர்மபுரி கராத்தே பெடரேஷன் தலைவர் நடராஜன், கம்பன் கழகத்தினுடைய மதிப்பறு முனைவர் தலைவர் ரவீந்தர், கம்பன் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் முனைவர் சா. முருகேசன், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகளை கர்நாடகா நிலை எடுப்பு ஆணையாளர் ஐஏஎஸ் சக்திவேல் தலைமைத் தாங்கி பரிசுகளை வழங்கினார்.

மேலும் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கிருஷ்ணகிரி தீயணைப்புத்துறை பொறுப்பாளர் மார்ட்டின் அவர்களும், நேருயுவகேந்திரா பொறுப்பாளர் அப்துல் காதர், தமிழ்நாடு மாநில தனியார் பள்ளி சங்கத்தின் உடைய நிர்வாகி தீர்த்தகிரி, காவேரிப்பட்டினம் பைனான்சியர் கணேசன், முன்னாள் ராணுவர் கணேசன், எல் ஐ சி சரவணன், மிட்டள்ளி ஊராட்சித் தலைவர் காவேரி ஆகியோர் இணைந்து வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கோப்பைகளை வழங்கினர். மாநில அளவிலான இந்த கராத்தே பெடரேஷன் போட்டியில் முதல் பரிசை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி சூளகிரி கோப்பையை தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை பாரத் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி தட்டி சென்றது. மூன்றாவது பரிசை கோபி கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி காவேரிப்பட்டினம் தட்டிச் சென்றது. இந்நிகழ்வில் கம்பன் கழகத்தினுடைய கவி மன்ற தலைவர் கவி நிலவு கவிஞர் ந.சதீஸ் தொகுத்து வழங்கினார். மேலும் கம்பன் கழகத்தினுடைய பொருளாளர் ஸ்ரீரங்கன், கம்பன் கழகத்தினுடைய துணைத் தலைவர் மதிப்புறு முனைவர் பாலாஜி, இயக்குனர் பேக்கரி முருகன், துணைத் தலைவர் சிங்காரவேலன், ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இறுதியாக நன்றியுரையை சூர்யா ஸ்போர்ட்ஸ் அகாடமி பொறுப்பாளர் சூர்யா இனிதே நிறைவு செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *