தேனி மாவட்டம் தேனி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 20.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு வேலை தேடும் வேலையில்லா பட்டதாரிகளை தேர்வு செய்ய உள்ளனர்

இந்த முகாமில் 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ கல்வித் தகுதிகள் யுடையவர்கள்12 ஆம் வகுப்பு ஜ.டி.ஜ. பட்டய படிப்பு இளநிலை பட்டப்படிப்புகள் நரசிங் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்கலுடன் பங்கேற்று தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்.

மேலும் விபரங்களுக்கு செல் நம்பர் 98948 .89794. என்ற நம்பரை தொடர்பு கொண்டு இது சம்பந்தமான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் இந்த வேலை வாய்ப்பு முகாமில் வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் இளைஞிகள் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார் மேலும் இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *