தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில் உலகத் தாய்மொழி நாள் 20.02.2026 இல் கொண்டாடப்பட்டது.

வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் நிகழ்வு கல்லூரி முதல்வர் முனைவர் சொ. வீரபாகு அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் ஆசிரியரும் எழுத்தாளருமான தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ “தமிழ் வளர்த்த தூத்துக்குடி ” என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அழிந்து போன மொழிகள் பற்றியும் தமிழ்மொழி குறித்தும் பேசினார். மேலும் தமிழில் முதன்முதலில் அச்சிடப்பட்ட தம்பிரான் வணக்கம் நூல், புன்னைக்காயலில் அச்சு வடிவம் கண்ட அடியார் வரலாறு நூல் உள்ளிட்ட நூல்களைக் காணொளி வாயிலாகக் காட்சிப்படுத்தி மாணாக்கருக்கு விளக்கினார்.

இந்நிகழ்வுக்கு வந்தோரைத் தமிழ்த்துறைத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் செ.சாந்தி வரவேற்றார். பேராசிரியை முனைவர் தெ.சந்திரா நன்றி கூறினார். நிகழ்வைப் பேராசிரியை பொன். கனகா தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் பேராசிரியர்கள் முனைவர் அ.அமுதா, முனைவர் தெ. சந்திரா, க.சிரஞ்சீவி, பொன். கனகா, முனைவர் சி.ஜாக்ஸன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில் உலகத் தாய்மொழி தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *