மன்னார்குடி.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மன்னார்குடி நகர கழகம் சார்பில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தாயார் மது ஒழிப்பு போராளி மாரியம்மாளின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
மதிமுக மன்னார்குடி நகர மாவட்ட செயலாளர் ப.பாலச்சக்திரன் தலமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுகவினர் ஏராளமானூர் பங்கேற்று மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்
பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்மையார் மாரியம்மாரில் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட அவைத்தலைவர். P.G.செங்குட்டுவன் முன்னிலையில் நகர செயலாளர் சண் சரவணன், நகர அவை தலைவர் கோ.வீரமணி நகர துணை செயலாளர் .p.நாகராஜ்,மாவட்ட பிரதிநிதிகள் மைக் P.ராஜா,T.வீராச்சாமி,மாவட்ட செயலாளர் N. செல்லதுரை மற்றும் கழத நிர்வாகிள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.