கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில்மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு
ரூ.1.17 கோடி மதிப்பீட்டிலான 3 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.11.17 கோடி மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 11 ஊராட்சிகளுக்கு ரூ.27,10,500 மதிப்பீட்டிலான குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4,50,134 குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. மேலும், முதியோர்களின் நலன்கருதி மாதந்தோறும் ரூ.1,200 ஆக ஓய்வூதியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,40,000 முதியோர்கள் பயனடைகின்றனர்.

மகளிர்கள் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுவதில் பேருந்து பயணத்திற்காகவே ஒரு பகுதியினை செலவு செய்கின்றனர். எனவே அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மகளிர் விடியல் பயணம் திட்டத்தினை செயல்படுத்தியன் மூலம் கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் 1,48,209 மகளிர்கள் கட்டிணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் பல்வேறு துறைகளின் மூலம் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கொத்தவாச்சேரி மற்றும் அரங்கமங்கலம் பகுதியில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தலா 35 இலட்சம் மதிப்பீட்டில் உளர் களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடம் , திறந்துவைக்கப்பட்டது.

கொத்தவாச்சேரியில் தரம் பிரிப்புக் கூடத்தின் அளவு 125 மெட்டிரிக்.டன் அளவிலும், உலர்களத்தின் அளவு 270 ச.மீட்டர் அளவிலும் மற்றும் அரங்கமங்கலத்தில் தரம் பிரிப்புக்கூடத்தின் அளவு 125 மெ.டன் அளவிலும், உலர்களத்தின் அளவு 272 ச.மீட்டர் அளவிலும் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் குறிஞ்சிப்பாடியில் புதியவட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை நிறைவேற்றும் வகையில் குறிஞ்சிப்பாடியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி புதிய வட்டாட்சியர் அலுவலகம் ரூ.6.93 கோடி மதிப்பீட்டில் தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம்தளம் தலா 397 ச.மீ பரப்பளவுடன் எனமொத்தம் 1191.00 ச.மீ பரப்பளவில் கட்டும் பணிக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது. தரைதளம் வரவேற்பு அறை, காத்திருப்புக் கூடம்,

நுழைவு வாயில் கணினி அறை, அலுவலகஅறை, கழிப்பறை வசதிகளுடனும், முதல்தளம் வட்டாட்சியர் அறைகள், அலுவலக அறை, கழிப்பறை வசதிகளுடனும், இரண்டம் தளம் கூட்டரங்கம், பதிவறை, நில அளவையர் பிரிவு, அலுவலக அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

அரசு மூலம் வழங்கும் மருத்துவ வசதிகள் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும், மகப்பேறு சிகிச்சை நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று மேற்கொள்வதை குறைத்து உள்ளூரிலேயே பிரசவம் மேற்கொள்ளவும், அவசர காலங்களில் பொதுமக்கள் அருகிலேயே சிகிச்சை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறையின் சார்பில் ஆடூர்அகரம் மற்றும் கீழ்பூவாணிக்கும் பகுதியில் தலா ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையம் அமைத்திட அடிக்கல் நாட்டப்பட்டது.

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் மனதிற்கினிய வகையில் கல்வி கற்றிடும் வகையில் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்டார்முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கனிமவள நிதியின் கீழ் தலா ரூ.94.24 இலட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள், குண்டியமல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட கனிமவள நிதியின் கீழ் ரூ.47.12 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் 2 வகுப்பறை கட்டடங்கள், ஆடூர்அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.47.12 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது புத்தகம் வாசிக்கும் திறனை அதிகரித்திடவும், பொதுஅறிவு மற்றும் பிற தகவல்களை படித்து பயன்பெறும் வகையிலும், போட்டி தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் படித்து பயனடையும் வகையிலும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டநூலகம் திறந்து வைக்கப்பட்டது. மேலும், கருங்குழியில் ரூ.74.50 இலட்சம் மதிப்பீட்டில் கிளை நூலகம் அமைத்திட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. என அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார், குறிஞ்சிப்பாடி நகரமன்ற தலைவர் கோகிலாகுமார், துணைத்தலைவர் ராமர், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (கட்டடம்) சிவசங்கரநாயகி, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, மாவட்ட நூலக அலுவலர் முருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *