தேனி மாவட்டம் கம்பம்அருகே உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கம்பம் நகரில் மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததோர் அடக்கம் சிறந்ததொரு அறக்கட்டளை நிறுவனமான துணிந்து நில் அறக்கட்டளையின் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனத்திற்கு மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த இரத்ததானம் முகாமிற்கு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை தாங்கி இரத்ததான முகாமை தொடக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு நடமாடும் மருத்துவ வாகனத்திற்கு மருத்துவ உபகரணங்களை துணிந்து நில் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
இதில் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனர் மனித நேயர் பண்பாளர் டாக்டர் எம் வேல்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர் வனிதாநெப்போலியன் பிரமலை கள்ளர் மகாஜன சமுதாய தலைவர் ஓ.ஆர்.நாராயணன் ஜெ.எஸ்.டி மஹால் அதிபர் சிறந்த பொறியாளர் ஜே.எஸ்.டி.அன்பழகன், தேனி மாவட்ட மதிமுக செயலாளர் வி எஸ் கே இராமகிருஷ்ணன், பெரியகுளம் இரத்த வங்கி மருத்துவர் பாரதி, அழகுவேல் ஓட்டுநர் பயிற்சி பள்ளி பயிற்றுநர் ரவீந்திரன் மற்றும் சமுதாய தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டன். இந்த இரத்த தான முகாமில் 104 பேர் இரத்த தானம் வழங்கினர். இரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.