முத்து குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் எழுச்சி மாநாடு தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. சங்க தலைவர் கனகராஜ் பர்னாந்து, பொதுச் செயலாளர் ராஜி பர்னாந்து, பொருளாளர் மிக்கேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, மக்கள் நலனுக்காக, வளர்ச்சிக்காக, ஏனைய சமுதாயத்துடன் சேர்ந்து நல்லிணக்கம் ஏற்பட முத்துக்குளி சங்கம் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் சாதாரணமாக எந்த பதவிக்கும் வர முடியாது. போட்டி கடுமையாக இருக்கும். நீங்கள் சார்ந்த சமுதாயம் மட்டுமின்றி ஏனைய சமுதாயத்துடன் சேர்ந்து நல்லிணக்கமாக இருந்து பொதுவாழ்க்கையில் செயல்பட்டால் தான் வெற்றி அடைய முடியும். அதைத் தாண்டி நான் நான், நான் என்று கூறினால் வெற்றியை ஒருபோதும் அடைய முடியாது.

நாங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உழைக்காமல் எப்படி பதவி அடைய முடியும். முழு நேரமாக அரசியலில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல., குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், தன் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். அரசியலும் பண்ண வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். இதை எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு அரசியல் இருப்பவர்கள் தான் அரசியல்வாதிகள், இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு போட்டுவிட்டு நானும் அரசியல்வாதி என்று கூற முடியாது. அரசியலில் எப்போது வெற்றி பெறுவார்கள், என்று யாருக்கும் தெரியாது.

ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தோல்வி அடையவன் முழுமையாக தோல்வி அடைவான் என்பது அல்ல, தொடர்ந்து செயல்பட்டால் மறுநாள் வெற்றியை சுவைக்கின்றான்.. இதுதான் அரசியல்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் நடைபெற்ற போது இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வந்து உதவி செய்தவர் தான் நடிகர் விஜய்.. ஆகவே மக்களுக்கு நல்லது செய்தவர்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *