கோவையில் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

சிறு குழந்தைகள் முதலான பள்ளி மாணவர்கள் தங்களது புதுமை படைப்புகளை காட்சி படுத்தி கவனம் ஈர்ப்பு கோவை இரத்தினம் சர்வதேசப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இணைந்து அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி மற்றும் நிதி அறிவாற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்..

ஒரு நாள் கண்காட்சியாக இரத்தினம் கிராண்ட் அரங்கில் நடைபெற்ற கண்காட்சியை
.பள்ளியின் தாளாளர் .ஷீமா செந்தில் மற்றும் பள்ளியின் முதல்வர் . ஆஷ்மி மற்றும் கல்வி நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் அபிநய சங்கரி ஆகியோர் கண்காட்சியைத் துவக்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்களது பல்வேறு சோதனைகள், செயல்விளக்க மாதிரிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.,இதில் சூரிய குடும்பம், நீர்சுழற்சி, மின்சாரம் தயாரிக்கும் முறை போன்ற பல்வேறு திட்டங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

கணிதக் கண்காட்சியில் பரப்பளவு மற்றும் சுற்றளவு மாதிரிகள், வடிவியல் உருவங்கள், அலகு மாற்றங்கள், புதிர்கள் மற்றும் முப்பரிமாண மாதிரி போன்றவை அழகாக அமைக்கப்பட்டிருந்தன.

இதே போல மாணவர்களின் நிதி அறிவாற்றல் திறனை வளர்க்கும் விதமாக
சேமித்து, செலவு செய்து, முதலீடு செய்யும் அறிவும் திறனை வளர்க்கும் வகையில் எழுதுபொருட்கள், நோட்டுப் புத்தகங்கள் அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், உடைகள், விளையாட்டு பொருட்கள், ஆகியவற்றை விற்பனை செய்து நிதி அறிவாற்றல் என்பது பணத்தைப் பற்றிய அறிவு மட்டுமல்ல அது ஒரு நல்ல வாழ்க்கைத் திட்டமிடலின் அடித்தளம் ஆகும். என்பதை மாணவர்கள் தங்களின் பேச்சாற்றல் திறமையால் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கவர்ந்தனர்.

கண்காட்சியில் 700 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *