புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி நல்லவாடு பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 42.60 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிக்கான பூமி பூஜை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு பாஸ்கரன் சிறப்பு கட்டிட கோட்டம்-2 செயற்பொறியாளர் மாணிக்கவாசகம் கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திருமதி விக்டோரியா இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் பாஜக மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு தொகுதி தலைவர் திரு லட்சுமிகாந்தன் விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி நல்லவாடு வடக்கு, நல்லவாடு தெற்கு மற்றும் அங்காளம்மன் கோயில் கிராம பஞ்சாயத்தார்கள் பள்ளி ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *