மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கோயம்புத்தூர் கல்லூரி மாணவி தனது நண்பருடன் விமான நிலையம் பின்புறம் பேசிக் கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு அந்த மாணவி மீது பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பலத்த காயத்துடன் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தொடர்ந்து தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதற்கு முக்குலத்து புலி கட்சி சார்பில் தமிழக அரசு மீது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது.
இதற்கு தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை திமுக அரசும் அது குறித்து வாய் திறக்கவில்லை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையில் மூன்று பேர் சுட்டு பிடித்துள்ளதாக காவல்துறை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
இவர்கள்தான் அந்த குற்றத்தை செய்தார்களா சந்தேகம் எழுந்து வருகிறது. உண்மையான குற்றவாளிகளை யார் என்பதை காவல்துறை வெளிக்கொண்டு வரவேண்டும்.
திருட்டு சம்பவங்களை ஈடுபடுவோர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் காவல்துறை அதிகாரிகள் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி உள்ளது உண்மையான குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய காவல்துறை முன் வர வேண்டும்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக காவல்துறையும், திமுக அரசையும் கண்டித்து அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு கண்டனத்தை தெரிவித்தாா்.