கோவையில் நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் ட்ரீம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி நேரு நகர் பகுதியில் நடைபெற்றது..
பள்ளி கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இதற்கான துவக்க விழா ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது கபடி போட்டியை பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் துவக்கி வைத்தார்..
இதில் நேரு நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ,ட்ரீம்ஸ் ஸ்போர்ட்ஸ் தலைவர் விமலா தேவி மற்றும் செயலாளர் பன்னீர்செல்வம்,பொருளாளர் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் எல்லைகள் கடந்த மனிதநேயம் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன..
இயற்கையான ஆடுகளத்தில் நாக் அவுட் சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் வீர்ர்கள் ஆர்வமுடன் விளையாடினர் விறுவிறுப்பாக நடைபெற்ற இதில் அதிக புள்ளிகள் பெற்று பி பிளஸ் தடாகம் அணி முதலிடத்தையும் ,,இரண்டாம் இடத்தை உக்கடம் யு.கே.பிரதர்ஸ் அணியும், மூன்றாம் இடத்தை மடத்தூர் எம்.கே.எஃப்.சி.மற்றும் நான்காம் இடத்தை காளப்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் பிடித்தன..
தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில்,முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் பழனிசாமி சாரதா மணி பழனிச்சாமி மற்றும் முதலாம் துணை ஆளுநர் செல்வராஜ் ,ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், முன்னாள் தலைவர்கள் லோகநாதன் ,நந்தகுமார் மற்றும் நடராஜ்,வட்டார சுப்பு செந்தில் குமார்,நேரு நகர் சங்க செயலாளர் பொறியாளர் தேஜஸ்வனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்..