தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பெரியகுளம் நகர் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளினை முன்னிட்டு பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா வின் திருவுருவ படத்திற்கு தேனி (கி) மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் வழிகாட்டுதலின்படி பெரியகுளம் நகர் கழக செயலாளர் பழனியப்பன் தலைமையில் அஇஅதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மேலும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அம்மாவின் ஆட்சி அமைய பாடுபடுவேம் என உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலளர் முருக்கோடை ராமர் தலைமையில், ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ் முன்னிலையில் மாவட்ட கழக இணைச் செயலாளர் முத்துலெட்சுமி ஏற்பாட்டில் பெரியகுளம் ஆடுபாலம் பகுதியில் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜெயக்குமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை தேனி (கி) மாவட்ட செயலாளர் அப்பாஸ் மைதீன், பெரியகுளம் (கி) ஒன்றிய செயலாளர் ராஜகுரு, தென்கரைப் பேரூர் செயலாளர் ஆண்டவர்தேனி நகர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார்,நகர இணை செயலாளர் முத்துலட்சுமி, துணை செயலாளர் வெங்கடேசன், நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் இனாமுல் அசன்,இலக்கிய அணி செயலாளர் தவமணி, வழக்கறிஞர் தவமணி கருப்பசாமி. சிறுபான்மை பிரிவு சலீம், மாவட்ட பிரதிநிதி விஜய் ஆனந்த், மோகன்,செந்தட்டி காளை, ஈஸ்வரன் துரைப்பாண்டி, கணேசன், பாப்பா இளமுருகன், பேரூர் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆ முருகேசன் உட்பட மாவட்ட,நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர், கழக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.