மன்னார்குடி., பிப்.24
முன்னாள் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக , அமமுக சார்பில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் இரண்டு சக்கர வாகனத்தில் தேரடியில் இருந்து , பந்தலடி , மருத்துவமனை , ருக்மணி பாளையம் வழியாக பேரணியாக முக்கிய வீதிகளின் சென்று. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமணிக்கம் , அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் அதிமுக நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட அதிமுக , அமமுக மாவட்ட ஒன்றிய , நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .