தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர்.
பின்னர் கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏகேஆர் ரவிச்சந்தர் கூறியதாவது: வைக்கோல் கட்டும் இயந்திரத்தில் சணலுக்கு பதிலாக மாஞ்சா நூல் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் .எனவே வைக்கோல் மட்டும் இயந்திரத்தில் சணல் மற்றும் பயன்படுத்த வேண்டும் மேலும் தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் மணல் குவாரி அனுமதிக்கப்படாத நிலையில் இரவு பகலாக மணல் கொள்ளை ஜோராக நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாநகரத்தில் பட்ட பகலில் மணல் லாரி போகிறது.எனவே வருவாய் கோட்டாட்சியர் பறக்கும் படை அமைத்து மணல் கொள்ளை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பெரமூர் அறிவழகன்: நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாநில ,மாவட்டத்தில் நெல் கடத்தல் உள்ளே வராமல் தடுக்க ஒருங்கிணைந்த ஒப்புதல் அமைப்பு எளிமை படுத்த வேண்டியும், அரசு அலுவலர்கள் குறிப்பாக் ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் போன்றவர்கள் வேலை நிறுத்தத்தினால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.மேலும் திருவையாறு தாலுக்கா பெரமூர் ஊராட்சி வைரவன் கோவிலில் இருந்து கல்லக்குடி கிராமம் வரை இரவு நேரங்களில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.. கூட்டத்தில் வேளாண்மை துறை, மின்வாரியத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்