திருத்துறைப்பூண்டி., பிப்.24
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமமுக திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி அமமுக நகரக் செயலாளர் செல்லப்பா என்கிற கோவிந்தசாமி , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இளவரசன், விஜயன், மாநில நிர்வாகி. ஜெ.செந்தில்குமார், நகர இணை செயலாளர் ராஜபாலு, மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் டி ஜி சண்முகசுந்தர் மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகரக் கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.