தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் துணை ராணுவப்படையினர் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் துணை ராணுவப் படையினர் அடையாள அணிவகுப்பில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் துணை ராணுவ படையின் டிஎஸ்பி கேசவன், இன்ஸ்பெக்டர் மனாஸ் ரஞ்சன் கோனார்,
உதவி இன்ஸ்பெக்டர் பி என் மது ஆகியோர் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு சென்றனர். தாராபுரம் காவல் நிலையத்தில் இருந்து துவங்கிய அடையாள அணிவகுப்பு பேரணி நகரின் முக்கிய வீதியில் வழியாக சென்று மீண்டும் பேரணி காவல் நிலையத்தை வந்தடைந்தது. போலீஸ் நிலையத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.