ரூ34.60 லட்சம் மதிப்பீட்டில் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள்
துறையூர் பிப்-27
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நபார்டு வங்கி நிதி உதவி 2024 -2025 திட்டத்தில் ரூபாய் 34.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை (26/02/2026) எம்.எல்.ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை மு.சாமிக்கண்ணு வரவேற்புரை ஆற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ்,வட்டார கல்வி அலுவலர்கள் ரகுபதி, சண்முகசுந்தரம் மற்றும் நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய கழக செயலாளர்கள் சிவ சரவணன்,நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய கழக செயலாளர்கள் சிவ சரவணன், வீரபத்திரன், ஊராட்சி செயலர் கண்ணதாசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ், உமாபதி, வழக்கறிஞர் தமிழ்செல்வன்,பள்ளி ஆசிரியர்கள் ரமேஷ், கோபிநாத், கௌரி, வைஜெயந்திமாலா,சாந்தி, முல்லை, கீதா, கவிதா, விஜயலட்சுமி, தீபா, இளையபெருமாள், வசந்தி,காயத்ரி பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்