தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் N.N. பேட்டை வீதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழக வெற்றிக்கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட N.N. பேட்டை வீதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையை உடனடியாக அகற்றக் கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில்
தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் மற்றும் இணைச் செயலாளர் ஷேக் பரீத் ஆகியோரது தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதில் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் நடுப்பகுதியில் மதுக்கடை இயங்குவது பொதுமக்களுக்கு இடையூறாகவும், சமூக அமைதிக்குத் தடையாகவும் உள்ளதாக குற்றம்சாட்டினர் மேலும், தினசரி மதுபானம் அருந்தி சாலைகளில் சண்டை, சச்சரவு ஏற்படுவதால் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு நகர செயலாளர் அபுதாஹிர் முன்னிலை
வடக்கு நகர செயலாளர் ரமேஷ்
மற்றும் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

அண்ணா சிலை அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *