புதுச்சேரி ஏனாம் பிராந்திய சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக புதுச்சேரி மக்களிடமும் மாண்புமிகு புதுச்சேரி முதல்வரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அஇஅதிமுக மாநில கழக செயலாளர் ஓம் சக்தி சேகர் அறிக்கை: மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தான் பெற்ற பதவியை கொண்டு பொதுமக்களுக்கும் தனது தொகுதி மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை அரசிடமும் அரசு அதிகாரிகளிடமும் போராடி வாதாடி நியாயமான முறையிலே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டுமே தவிர மிரட்டல் விடுப்பது கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவது கலவரங்களை ஏற்படுத்துவது போன்று பேசுவது போன்ற செயல்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளின் மாண்புக்கு நல்லதல்ல.

அதுவும் முதன்முறையாக ஒரு மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மக்கள் எந்த நம்பிக்கையில் அவரை தேர்ந்தெடுத்தார்களோ அதனை அவர்களுக்கு நிறைவேற்ற முற்பட வேண்டும் மாறாக தேவையில்லாத கருத்துக்களை கூறுவதும் ஒரு மாநிலத்தில் நான்கு முறை முதல்வராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும், மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் உள்ள மரியாதைக்குரிய முதல்வர் குறித்து அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. எனவே ஏனாம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறுவது மட்டுமல்லாமல் புதுச்சேரி மக்களிடமும் மரியாதைக்குரிய முதல்வர் அவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும் இதுபோன்று இதன் பிறகு நடைபெறாத வண்ணம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் காவல்துறை இவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று புதுச்சேரி மாநில அஇஅதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *