ஒடிசாவில் கோர ரெயில் விபத்தை தொடர்ந்து மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் புதுவையில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க.வினர் அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், ம.தி.மு.க. செயலாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சேதுசெல்வம் தி.மு.க. அவை தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பா ளர்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, தைரியநாதன், ஏ.கே.கல்யாணி கிருஷ்ணன், பொருளாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண். குமரவேல், கே.எம்.பி. லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கோபால்,கார்த்திகேயன், வேலவன், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம்பரிதி, பழனி, பிரபாகரன், மாறன் என்ற கனகராஜ், கோபால கிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ் மற்றும் அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து, மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *