புதுச்சேரி: 15-வது தி.மு.க. பொதுத்தேர்தல் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக கிளைக் கழகத் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைக் தி.மு.க. நிர்வாகிகள் பட்டியலை தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கு அவைத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் (3 பேர்), பிரதிநிதி (2 பேர்), செயற்குழு உறுப்பினர் (6 பேர்) என மொத்தம் 14 பொறுப்புகளுக்கான தொகுதி நிர்வாகித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுக்கல் கட்சி தலைமையால் வழங்கப்பட்டன. தேர்தலில் போட்டியிடும் தொகுதி நிர்வாகிகள் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மனுக்கள் பெறப்பட்டன. இதில், மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், இலாசுப்பேட்டை, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார் பேட்டை, அரியாங் குப்பம், மணவௌி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய 22 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ., முன்னிலையில், தலைமைக் கட்சித் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளர் பி.டி.சி. ஜி. செல்வராஜ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் ஆணையாளரால் ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது. இதில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத்,. செந்தில்குமார், மாநில துணை அமைப்பாளர்கள் சண். குமரவேல், ஏ.கே. குமார், குணாதிலீபன், எஸ்.எஸ். செந்தில்குமார், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் கே.எம்.பி. லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் எஸ். கோபால், வி. கார்த்திகேயன், அ. முகிலன், சன். சண்முகம், ப. வடிவேல், கோபால கிருஷ்ணன், டாக்டர் நித்திஷ், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *