உப்பிலியபுரத்தில் ஒன்றிய திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” மாபெரும் பொதுக்கூட்டம்

துறையூர் மார்ச் -01
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரத்தில் “தமிழ்நாடு தலைகுனியாது”என்ற தலைப்பில் 27-02-2026அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கி தமிழக அரசின் சாதனைகள் மற்றும் மகளிர்கான வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்து செல்வன்,அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் முன்னிலை வைத்தார். கழகத்தின் பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி, மருத்துவரணி மாநில செயலாளர் கனிமொழி என் வி என் சோமு ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அருமையாக எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிளும் திராவிட அரசின் சாதனைகளால் வெல்வோம் 234 தொகுதிகளையும் மீண்டும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சராக்குவோம் என்று பேசினார்கள்.

இதில் தொகுதி பொறுப்பாளர் தங்க கமல், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன்,மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ்,பேரூர் கழக செயலாளர்கள் நடராஜ், வெள்ளையன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர், வைரி மணிகண்டன் மற்றும் மாணவரணி இளைஞர் அணி மகளிர் அணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெ நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *