நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா
புதுப்பட்டினம், பிப்.28
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா பள்ளி தாளாளர் அருட் சகோதரி வேளாங்கண்ணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பள்ளி முதல்வர் ஞானதங்கம் மற்றும் யுகேஜி ஆசிரியர்கள் அமுதா, ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோயம்புத்தூர் தொழிலதிபர் இராமு மற்றும் கீழார் ஏ.சிவா ஆகியோர் கலந்து கொண்டு யுகேஜி மாணவர்கள் 57 பேருக்கு சிறார் பட்டம் வழங்கி வாழ்த்தினர். பின்னர் மாணவர்களின் கண்காட்சி அரங்க கூடத்தையும் சிறப்பு அழைப்பாளர்கள் திறந்து வைத்தனர். விழாவில் குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது