அறிவியல் தினத்தையொட்டி மதுரையில், சாதிக்க பார்வை யின்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, கே.கே நகர் மதுரையில் விஷன் எம்பவர் சார்பாக மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மதுரை கிழக்கு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் நாகலட்சுமி விழாவை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு பிப்ரவரி 28 உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு இந்நிறுவனத்தால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அறிவியல் மற்றும் கணித துறைகளில் வருங்காலங்களில் பார்வை திறனற்ற மாணவர்களும் சிறந்த முறையில் சாதிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல்,நாக சுந்தரி, ராஜா, ஆனந்தி விஷன் எம்பவர் நிறுவனத்திலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ரிஷிவதனா, உதவி தொழில்நுட்ப நிபுணர் யுவராஜ் மற்றும் வைஷ்ணவி இணைந்து அறிவியல் கண்காட்சியை கொண்டாடினர். அறிவியல் சோதனைகள், கணிதம் தொடர்பான கணக்கீட்டு சிந்தனையை வளர்க்கும் விளையாட்டுகள், சுற்றுச்சூழலை காப்போம் எனும் தலைப்பில் நாடகம், பாடல், நடனம் என பார்வையற்ற மாணவர்கள் பார்வையுள்ள மாணவர்களுக்கு செய்து காட்டினர். மதுரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
கரும்பாலை பள்ளியிலிருந்து 30க்கு மேற்பட்ட பார்வையுள்ள மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் அறிவியல் கண்காட்சியை கண்டு வியந்து பாராட்டினர்.
வினாடி வினா போட்டி ,”நெருப்பில்லா சமையலின்” கீழ் பல்வேறு விதமான உணவுப்
பொருட்களை பார்வைத்திறனற்ற மாணவர்கள் பிற மாணவர்களுக்கு செய்து காட்டி ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறினார்கள். இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் விஷன் எம்பவர் சார்பாக பங்கேற்பாளர் பதக்கங்களும், வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக் கான வெற்றியாளர் பதக்கமும் வழங்கப்பட்டது.