தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் கிராமத்தில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேருந்து நிழல் குடையை திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியத்தில் 52 லட்சத்தில் பேருந்து நிழல் குடை மற்றும் காங்கிரட் சாலைக்கான பூமி பூஜையை தொடக்கி வைத்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில் தமிழக முதல்வர் அனைத்து பொதுமக்களுக்கும் சென்ற முறை வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றி சொல்லாததையும் செய்தார் மகளிர்க்கு திடீரென்று 5000 வழங்கி அனைத்து மக்களும் தமிழக முதல்வரை பாராட்டி வருகிறார்கள் அங்கே கூடியிருந்த பெண்களிடம் உங்களுக்கு தமிழக அரசு திட்டங்கள் வந்து சேர்கிறதா மகளிர் தொகை கனவிலும் திட்டம் 100 நாள் வேலை என்று பத்துக்கு மேற்பட்ட திட்டங்களை பெண்களிடம் பேசினார் அதை தொடர்ந்து காவல் நிலைய அருகே உள்ள பேருந்து நிழற்குடை துவக்கி வைத்து விட்டு தாராபுரம் பழனி சாலை சுமார் 22 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாலைக்கு மற்றொரு சாலை 20. 70 ரூபாய்க்கு பூமி பூஜையை துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் . தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். வி செந்தில்குமார் அலங்கியம் முன்னாள்பஞ்சாயத்து தலைவி சசிகுமார் தமிழ்மாறன் அமுதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் அப்பகுதி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.