கரூர் செய்தியாளர் மரியான் பாபு

28முதல்1வரை..
கரூர் மாவட்டத்தில் மிக பிரமாண்டமான ஜவுளி தொழிற் கண்காட்சி தொடங்கியது.

500 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.
கரூரில் ‘டெக்ஸ் டெக் ஷோ ஜவுளி தொழிற் கண்காட்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் பிரேம் மஹால்லில் நடைபெறுகிறது.கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். கைத்தறி ஏற்றுமதி உற்ப்பத்தியாளர்கள் சங்க செயலாளர் பால்ராஜ்,கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனபதி,கரூர் டைஸ் மற்றும் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் பழனிசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.


கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், கரூர் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத்தலைவர் ரமேஷ்,கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தி அன்பொளி காளியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியில் ஹோம் டெக்ஸ்டைல், நவீன ஜவுளி இயந்திரங்கள், சூயிங், கட்டிங், பிரிண்டிங், எம்ராய்டரிங் என 500 முண்ணனி பிராண்ட் நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்பத்தை காட்சி படுத்தியுள்ளனர்.

ஜவுளி உற்பத்தி சம்பந்தமான அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கிட ஏதுவாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடு களை டெக்ஸ் டெக் ஷோ கிருஷ்ணா மற்றும் குழுவினர் செய்து இருந்தனர். இந்நிகழ்வில் டெக்ஸ்டைல் சம்பத்தப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *