தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தேசிய ஜனநாயக கூட்டணி குண்டடம் கிழக்கு ஒன்றிய தெருமுனை பிரச்சாரம் கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட கரிச்சிக்கட்டு புத்தூர், ஜோதியம்பட்டி, சேடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலனி வேங்கி பாளையம் இடையன் கிணறு கோப்பணம் பாளையம் தேவராஜ பட்டணம் மற்றும் கேசவன் நகர் மலைப்பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு Bharatiya Janata Party (பாஜக) கிழக்கு ஒன்றியத் தலைவர் வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் ஸ்ரீ ராம், மாவட்ட துணைத்தலைவர் உலகநாதன், மாநில இளைஞரணி துணைத்தலைவர் யோகேஸ்வரன், மாவட்ட செயலாளர் (ஊடக பிரிவு) பார்த்திபன், மாவட்ட செயலாளர் (விருந்தோம்பல் பிரிவு) சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் All India Anna Dravida Munnetra Kazhagam (அஇஅதிமுக) குண்டடம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய, கிளை மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அரசியல் நிலவரங்கள் மற்றும் பொதுமக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.