இந்திய – இலங்கை இருநாட்டு பக்தர்கள் சங்கமிக்கும் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.
இந்திய இலங்கை மக்கள் சங்கமிக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழக பக்தர்கள் அனைவரும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகுகளில் புறப்பட்டுச் சென்று கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொண்டனர். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சங் கர நாராயணன், ஏ.எஸ்.பி ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 90 விசைப்படகுகளில் 3.375 பக்தர்கள், 21 நாட்டுப்படகில் 366 பக்தர்கள் என மொத்தம் 3,741 பேர் புறப்பட்டு கச்சத்தீவை சென்றடைந்தனர். இலங்கையில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவில் பக்தர்கள், அதிகாரிகள் விழாக்குழுவினர் என 8,900க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணியளவில் நெடுந்தீவு பங்கு தந்தை பத்திநாதன் தலைமையேற்று, புனித அந்தோணியார் உரு வம் பொறித்த கொடியை ஏற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடை பெற்றது. தொடர்ந்து நடை பெற்ற சிலுவை பாதையில் இருநாட்டு பக்தர்களும் சிலுவையை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து சிலுவைப்பாதை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
சிறப்பு ஆராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு நன்மை வழங்கப்பட்டது. இரவு திருவிழா சப்பர பவனி நடை பெற்றது. இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநா தன், யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜெபரத்ணம் உள்ளிட்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டு திருப்பலி நடைபெற்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இருநாட்டு பக்தர்களும் கச்சத்தீவில் இருந்து திரும்பினர்.