மன்னார்குடி., மார்ச்.08

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்த்தநாதபுரம் , பாமணி, உள்ளூர் வட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் பாமணி ஆற்றின் குறுக்கே உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கர்த்தநாதபுரம் தட்டி பாலத்தை அகற்றி விட்டு புதிய கான்கிரீட் பாலம் கட்டித்தர வேண்டும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் கர்த்தநாதபுரம் மற்றும் புது பாலத்திற்கு பாமணி ஆற்றின் குறுக்கே இணைப்பு பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்து பேசியதின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு பாலங்களும் ரூ 10. கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி கட்டி தரப்படும் என உறுதியளித்தார்.

கடந்தாண்டு கட்டுமானப் பணி தொடங்கி பணிகள் முழுவதும் முடிவுற்ற நிலையில் கர்த்தநாதபுரம் மற்றும் புதுபாலம் ஆகிய இரண்டு பாலங்களையும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி. ராஜா திறந்து வைத்தார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *