பேராவூரணி மார்ச் 08
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவிற்குபட்டிமன்ற நடுவரும், தலைமை ஆசிரியருமான கோவி.தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் கே.ஷாகிதாபானு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி. நந்தினி, பள்ளி மேலாண்மை குழு தலைவி பி.கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருகை தந்த அனைவரையும் இடைநிலை ஆசிரியர்
க.நீலகண்டன் வரவேற்று பேசினார்.

தலைமை ஆசிரியை இ அன்புமேரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்.கே.பழனிவேல், மு.பாரிஅன்பழகன்,ஆர்.நாகப்பன், ஆசிரியர்இயக்க நண்பர்கள் ஆர்.கண்ணன், ச.இளமதியன்,பி.சேகர், டி.முருகையன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செ.ராகவன்துரை, கு.பாலசந்தர்,சி.லெட்சுமணசாமி, ச.செல்லத்துரைஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு நடைபெற்றது. விழா நிறைவில் கல்விபுரவலர் செ.சிவகுமார் அனைவருக்கும் நன்றி கூறி பேசினார்.

பேராவூரணி நிருபர் நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *