மன்னார்குடி., மார்ச்.10
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தர்ம. சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது.. கடந்த 10 தினங்களாக அமெரிக்கா இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது கொடூரமான தாக்குதலை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் உலக நாடுகள் முழுவதும் பொருளாதார வளர்ச்சியில் நெருக்கடியை சந்திக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்ற நாடுகளை பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளாக வைத்திருக்கும் முயற்சியில் அமெரிக்க ஈடுபட்டு வருகிறது.
இன்று கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கடுமையாக உயர்ந்துள்ளதால் வீட்டுக்கு உபயோகிக்கக்கூடிய சமையல் சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் , பெட்ரோல் , டீசல் விலை, முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் பல உணவு விடுதிகள் மூடப்பட கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ஈரான் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் ரஷ்யாவிடம் இந்தியா கட்சா எண்ணெய் வாங்கிகொள்ளலாம் அமெரிக்க அதிபர் உத்தரவிடுவதற்கு காரணம் என்ன.? தயவு கூர்ந்து இஸ்ரேல், ஈரான் போர் முடிவுக்கு வரவேண்டும்.
வளரக்கூடிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் தள்ளக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. காவரி டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மகன்கள் வேலையை தேடி ஈரான் நாட்டிற்கு சென்றவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை.
அமெரிக்க அதிபர் பதவி ஏற்றத்தில் இருந்து உலக நாடுகள் முழுவதும் பதற்றத்தில் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகள் கூட்டணியாக இருந்து கொண்டு ஈரான் நாட்டின் மீது போர் தொடுப்பதால் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திரும்பவும் மத்திய அரசு எண்ணெய் கிணறு அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்து வருகிறது.
உடனடியாக இஸ்ரேல் , ஈரான் போர் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் பாதுகாக்க வேளாண் மண்டலத்தில் பெட்ரோல் , டீசல் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டால் பின் விளவுகளை சந்திக்க கூடிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.