கோவை, மார்ச். 6
கோவை சின்னதடாகம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவச் சேவையாற்றி வரும் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனை, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு கே.ஜி மருத்துவமனையின் தலைவர், பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, புதிய மருத்துவமனைக் கட்டடத்தைத் திறந்து வைத்துச் சிறப்பரை ஆற்றினார்.
மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் டி. பரமேஸ்வரன் மற்றும் நிர்வாக மற்றும் மனிதவளத் துறைத் தலைவர் பானுப்பிரியா பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த இரண்டு தசாப்தங்களாக இப்பகுதி மக்களுக்கு வழங்கி வரும் சேவையை, இந்த புதிய நவீன கட்டடத்தின் மூலம் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தொடர உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
விழாவில் கௌரவ விருந்தினர்களாக ஐ.எம்.ஏ தலைவர் தேர்வு டாக்டர் ஏ.கே. ரவிக்குமார், ஐ.எம்.ஏ அரசு மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் இயக்குநர்
டாக்டர்.எஸ். கார்த்திக் பிரபு , இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி
முன்னாள் பேராசிரியர் டாக்டர் என். தமிழ்செல்வன், ஐ.எம்.ஏ கோவை தலைவர்
டாக்டர் பி. கோஷல் ராம், ஐ.எம்.ஏ கோவை தலைவர் தேர்வு டாக்டர் ஆர். ஸ்ரீ ராமலிங்கம், ஐ.எம்.ஏ நிதிக் செயலாளர் டாக்டர் ஆர். பாலமுருகன்,தலைமை கட்டிடக்கலைஞர்
எஸ். கண்ணன் மற்றும் சின்னதடாகம் பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் எனப் திரளானோர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டடத்தில் மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய் சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐஸ்வர்யா குழுமத்தின் கீழ் செயல்படும் ஐஸ்வர்யா கல்வி ஆலோசனை மையம், பானுப்பிரியா பார்மாசூட்டிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்றனர்.