சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மதுரைக்கு சென்று வர காலை நேரத்தில் நேரடி பஸ் வசதி இல்லை ஆகவே காலை நேர பஸ் மற்றும் மதுரையில் இருந்து இரவு நேர பஸ் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இதனை நிறைவேற்ற வேண்டும் என தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சரை வலியுறுத்தி வந்தனர்
இந்நிலையில் சுரண்டையில் இருந்து தினமும் காலை 6-45 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு மதுரை சென்றடையும் வகையிலும் பகல் 11-45 மணிக்கு சுரண்டையில் இருந்து புறப்பட்டு 4-10மணிக்கு மதுரைக்கும் மதுரையில் இருந்து பகல் 11-35 மணிக்கு புறப்பட்டு மாலை 4-00 மணிக்கு சுரண்டைக்கும் மதுரையில் இருந்து மாலை 4-35 மணிக்கு புறப்பட்டு இரவு 9-05 மணிக்கு சுரண்டைக்கு வரும் வகையில் செங்கோட்டை மற்றும் புளியங்குடி அரசு பஸ் டெப்போ பஸ்கள் இயக்கப்படுகிறது
இதனையடுத்து காலை 6-45 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் இருப்பினும் இப் புளியங்குடி டெப்போவில் இருந்து இயக்கபடும் பஸ் பழைய ஊதா வண்ண பஸ்ஸாக இயக்கப்படுகிறது அதனை மாற்றி நவீன பிஎஸ்6 பஸ்ஸாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்