மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதி பீர்க்கங்கரணை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பீர்க்கன்காரணை பகுதி கழக செயலாளர் வளையாபதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச இராசேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குழந்த ஏசு தேவாலயம் அருகே 61 தெற்கு வட்ட செயலாளர் எஸ்.ஆர்.நாகராஜன் ஏற்பாடடில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான சிட்லப்பாக்கம் இராசேந்திரன் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து தேவனேசன் நகர் பீட்டர் பள்ளி அருகே 61 வடக்கு வட்ட கழக செயலாளர் குணா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் காலத்து கொண்டு சிறப்புரையாற்றிய பின் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பகுதி கழக வட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *