பெருகவாழ்ந்தான்., மார்ச்.11

திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வேளாண் உற்பத்திக்கு எதிராக மத்திய, அரசு விளை நிலங்களை அழித்து விவசாய உற்பத்திக்கும், விவசாய மக்களுக்கும் கேடு விளைவிக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திய வண்ணம் இருந்து வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பெருகவாழ்ந்தான் கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 250 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தியும், குறிப்பாக மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் எந்தவித முறையான அனுமதியின்றி சோலார் மின்சக்தி அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இத்தகைய சோலார் மின்சக்தி அமைப்பு காரணமாக நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும், வெப்பநிலை உயர்வு காரணமாக சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடையும் அபாயம் ஏற்படுள்ளது.

பெருகவாழ்ந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், விவசாயத்தை சார்ந்து வாழும் கிராம மக்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும் அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாகவும்,

பெருகவாழ்ந்தான் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த அனைத்து கட்சியை சோந்த பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இத்தகைய சோலார் மின்சக்தி திட்டத்தை மத்திய மாநில அரசு கைவிடக்கோரி 500க்கும் மேற்பட்டவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *