காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பாக கல்லூரி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் போட்டிகள் “மார்கதர்ஷன்”-2026 என்ற தலைப்பில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கு பெறும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக முதுகலை வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். A. விக்ரமன் அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவிற்கு ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் முதல்வர் முனைவர் கலை. இராம.வெங்கடேசன் அவர்கள் குத்து விளக்கேற்றி தலைமையுரை ஆற்றினார்.
காஞ்சிபுரம் SEW Engineers நிறுவனத்தின் வணிகத் தலைவர் திரு . K. பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மார்கதர்ஷன் – 2026 விழாவினை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றிய அவர் கல்லூரி படிப்பை முடித்து சமுதாயத்திற்கு வரும் இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று தாரக மந்திரம் உழைப்பு, நேர்மை மற்றும் உண்மை மட்டுமே . பணம் சம்பாதிப்பதற்கு எந்தத் துறைகளை , வழிகளை தேர்ந்தெடுத்தாலும் மனிதன் பின்பற்ற வேண்டிய மந்திரமாக இந்த மூன்றையும் கடைபிடிக்க வேண்டும் எனவும், தன்னுடைய அனுபவத்தை பிறரின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதை கடமையாகக் கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
10 க்கும் மேற்பட்ட கல்லுரிகளில் இருந்து பல்வேறு மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஸ்ரீ சங்கரா கல்லூரி முதல்வர் முனைவர். கலை.இராம. வெங்கடேசன் அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவினை வணிகவியல் துறையில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்கள் ஒருங்கினணத்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக வணிகவியல் இளங்கலை துறைத் தலைவர் M. வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.