மன்னார்குடி., மார்ச்.13
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இலக்கணாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி மாநில சுற்று வட்டச் சாலை அறிவிக்கப்பட்டு தற்போது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை திருமக்கோட்டை திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களின் சாலைகளை இணைக்கும் வகையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ 124 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரைவட்ட வடிவில் நிறைவு பெற்றுள்ளது. இந்த சாலையினை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி முலம் திறந்து வைத்தார்.