ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் 2022-23ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற 79 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் வே. நாகராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி கல்லூரியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் R. சங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

முனைவர் க.பாலசுப்பிரமணியன், முன்னாள் முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏரியூர் அவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முனைவர் சி.நடராஜன், வணிகவியல் துறைத்தலைவர் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து இவ்விழாவினை சிறப்பாக நடத்தினார். இப்பட்டமளிப்பு விழாவானது இக்கல்லூரியில் நடைபெற்ற முதலாவது பட்டமளிப்பு விழா என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *