தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நேரில் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். நடந்த சம்பவங்களை கேட்டறிந்தவர், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உதவியாளர் தினேஷ்குமார் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மகள் இறந்த துக்கத்தில் சாப்பிடாமல் இருந்த அந்த மாணவியின் பெற்றோருக்கு ஜீஸ் கொடுத்து குடிக்க வைத்தார்.

இதனை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் மாணவி உயரிழப்பு தாங்க முடியாத துயரம். மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க சென்ற போது குளத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் புகாரை பெற்றுக் கொள்ளாமல் இருந்தது கொலை செய்ததற்கு சமம்

காட்டு பகுதியில் அந்த மாணவி அலங்கோலமாக கிடந்தது. கழுத்து கருப்பு துணி இறுக்கப்பட்டு பாலியல் குற்றம் கொலை செய்துள்ளது பயங்கரம்,

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உண்மையான குற்றவாளிகளை கைது செய்து அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான புதிய சட்டம் ஏற்ற வேண்டும்.

மாணவியின் குடும்பம் எழ்மையான குடும்பம். அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை தொகை வழங்க வேண்டும், அந்த மாணவியின் சகோதரி கல்விச் செலவை ஏற்பது மட்டுமின்றி, படிப்பு முடிந்ததும் அவருக்கு தகுந்த வேலை வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரின் உதவியாளரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளேன். மேலும் இது குறித்து தமிழக முதல்வருக்கு அறிக்கையும் கொடுக்க உள்ளேன். இனிமேல் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *